அவள் பெண் வண்ண அழகு மயில்

தென்றல் மணக்கும் கொடி
முல்லை மலராய் வந்தாள்
அருகில் நின்றதும் மாம்பழக்
கன்னங்கள் தேன்சிந்தின
இதழ்கள் புன்முறுவல் பூத்தன
மலர் பற்களில் இருந்து சிந்திச்
சிதறின மௌவல் துகள்கள்
பெண் வண்ண அழகு மயில்
தன் உடலிறகை அசைத்து நடந்து
செல்கையில் என்னிடம் சாடை புரிந்தாள்
அக்கணமே என் நெஞ்சினைக்குத்திப்
பதம் பார்த்தன இரு விழி வேல்கள்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (8-Sep-20, 1:56 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 233

மேலே