முட்டாள் நிலவு

நான் தான் அழகி என்பதை
உலகிற்கு காட்டிக்கொள்ள
உன்னை மறந்து
"நீ"உறங்கும் வேளையில்
உன் கருவிழி மை திருடி
பகலிற்கு சாயம் பூசி
இருளாய் மாற்றி
வானில் நின்று ஒளிரும்
முட்டாள் நிலவிற்கு தெரியாது!
"நீ"தான்
பிரபஞ்சத்தின் பேரழகி என்று!!!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (8-Sep-20, 1:41 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : muttal nilavu
பார்வை : 3724

மேலே