பெண்
பெண்ணே பெண்ணின் தனியழகு என்றுமே
உந்தன் பெண்மையே அதுதரும் மென்மையே
அதில் கலந்திருக்கும் அன்பெனும் அமுதம்
உன்னில் பெண்ணே வீரமுமுண்டு ஆனால்
அதைநீ அறியாதிருத்தல் கூடாது உன்னில்
மறைந்துள்ள வீரத்தை அறிந்துகொள் வளர்த்துக்கொள்
உன்னை உன்கற்பை சூறையாட வரும் கயவரை
உந்தன் கைகளால் மாய்த்துவிட்டு சக்தியாய்
மாறி நீயே ....... ஆனால் பெண்ணே நீ
பெண்ணாகத்தான் காட்சி தரவேண்டும்
அச்சம் நாணம் பயிர்ப்பின் வடிவாய்
பூவையாய், கயல் விழியாளாய் கார்க்கூந்தல்
உரிமையாளாய் கற்புக்கரசியாய் என்றுமே
அன்பெனும் அமுத கலசம் ஏந்திவரும்
உலகைப் பேணிவரும் சக்தி ரூபமாய்