நிலவாய் நீ வருவாயோ பெண்ணே
காரிருளைக் கிழித்து நிலவு வந்தது
இருளெல்லாம் போனது நிலவொளியில்
இருள் நீங்கிய ஜகமும் நிலவின் தன்னொளியில்
பூமியே வைகுண்டமா னது
பெண்ணே நீவருவது எப்போது நிலவாய்
வந்தென் மனவிருளைப் போக்குவதெப்போது
என்னிதயத்தில் ஒளிநிரப்பி அங்கு நீயமர்ந்து
என்னவளாய் என்னை ஆள்வதெப்போது