நானும் தயார் அழகியே

மயில் ஒத்த அழகாளே

குயில் ஒத்த குரலாளே

முகில் ஒத்த முடியாளே

நவீனத்து நாகரீகத்தால்

நவபாகத்தில் பச்சைக்குத்தி

நளீனத்து நடை பழகி

நகைகளின் வகை சுருக்கி

ஆடைகளின் அளவை மாற்றி

அன்றாடம் அழகழகாய்

கொண்டாடும் வாழ்க்கைதனை

குதுகலத்தோடு வாழ்ந்து முடிக்க

குறுகுறுப்பாய் காத்திருக்கேன்

கூட்டிச் சென்று கட்டிக்கொள்

கூட வர நானும் தயார் அழகியே

------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (14-Sep-20, 9:20 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 91

மேலே