திருமந்திரம் - 3

திருமந்திரம் பாடல் 318

" ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கிப் பிணம் என்று பேர் இட்டு
சூரையங் காட்டிடை கொண்டுபோய் கட்டிட்டு
நீரினின் மூழ்கி நினைப்பொழிந் தாரே "

மிக எளிமையான இந்த பாடலுக்கு பொருளுரை தேவையில்லை . ஆனால் சித்தர்கள் பாடல்கள் ஒவ்வொன்றிலும் ஆழமாக சித்திக்க பல கருத்துகள் உள்ளன .

முதல் வரியில் இறந்தவர் வீட்டில் ஒலிக்கும் ஒப்பாரியைக் கூறுகிறார் . ஒப்பாரிகள் நாட்டுப்புறப்பாடலின் ஒரு பிரிவாகவே உள்ளது . இறந்த வீட்டில் பெருங்குரல் எடுத்து அழுவதும் , இறந்தவராது முறைமை பெருமைகளை பாடலில் கூறுவதும் , அவரது பிரிவு தரும் துன்பத்தை வாய்விட்டுக் கூறி அரற்றுவதுமே ஒப்பாரிப்பாடல்களின் தனிச்சிறப்பு .

கடைசி இரண்டு வரிகள் ஆழமான கருத்துகளை ,, உண்மைகளை உள்ளடக்கியவை . வாழ்ந்தவரை இருந்த பெயரை நீக்கி பிணம் என்று பெயரிட்டி அழைக்கின்றனர் . இடுகாட்டில் கடைசி காரியங்களை செய்தவுடன் நீரில் இறங்கி தலையை நீரில் முங்கி இறந்தவரை பற்றிய நினைவை மறந்தொழிவர் .

திருமந்திர பாடல் எண் -- 316 முதல் 341 வரை யாக்கையின் நிலையாமையை பாடு பொருளாக கொண்டு பாடியுள்ளார் . பாடல் எண் 543 ஆம் பாடல் முதல் அது யோக நூலாக விரிகிறது சிவயோகம் என்னும் புதிய வாழ்வியல் முறையை அறிமுகப்படுத்துகிறது .

திருமந்திரம் இன்னும் மணக்கும் ...

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (14-Sep-20, 9:19 pm)
பார்வை : 94

சிறந்த கட்டுரைகள்

மேலே