காதலால் வாழ்ந்தகுருவி

மனைவிக்காக
ஜாஷகான் கட்டிய
தாஜ்மகால் முகலாயர்களின்
கட்டிடக்கலை....

ஓரே பாறையிலே
பல யானைகளின் வடிவங்களை
செதுக்கியது பல்லவர்களின்
கட்டிடக்கலை....

ஓரே முற்றத்திலே
பல மாடங்களை
கட்டி அலகு பார்த்தது
செட்டி நாட்டு கட்டிடக்கலை.....

உழிகொண்டு
சிலை செதுக்கிய
சிற்பி ...
அவனுக்கு
மேலே அதைப்பார்த்து
மிரண்டு போனான்...

ஆஹா என்ன அழகு
அழகு நிலாக்கூட
காதல்கொள்ளும்
காதல் கோட்டையல்லவா
அது.....

அலகாலே
கூடுகட்டி
ஆகாயத்தில்
அழகுபார்த்து....

பிள்ளைகள்
பார்க்காத
பள்ளி அறையையும்
சேர்த்தே கட்டி...

காதலால்
வாழ்ந்தகுருவி
தூக்கணாங்குருவி
இதுதான்
கட்டிடக்கலையின்
முன்னோடி.

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (14-Sep-20, 11:33 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 147

மேலே