முகநூல் பதிவு 105

ஆழ்துளை கிணற்றை சரிவர மூடாமல்.....பெற்றோரின் கவனக் குறைவால் குழந்தை சுர்ஜித் மரணம் நடந்தேறியது என்பது மறுக்கமுடியாத உண்மை.... பெற்றோர்கள் செய்த தவறுக்கான தண்டனை கிடைத்துவிட்டது....

வாழ்நாள் முழுதும் உலகத்திலேயே மிகவும் ஆறுதல் கொள்ள இயலா புத்திர சோகத்தில் அவர்கள் இனி கடக்க வேண்டும்....இதைவிட கொடுமையான தண்டனை அவர்களுக்கு எவராலும் கொடுக்க இயலாது..... அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று வாதிடுவது சரியல்ல..... மனிதநேயமும் அல்ல.....

ஆனால் அதற்காக அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டு பெற்றோர்களுக்கு இவ்வளவுப் பெரிய இழப்பீடுத் தொகையை வழங்குவது ஏற்புடையதல்ல.... முழுக்க முழுக்க அரசியல் நாடகமே.....

எத்தனையோ அகால மரணங்கள் தினம் தினம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.... அது ஒருநாள் ஒருவரிச் செய்தியாக முடிந்துவிடும் ......அது பெரிதாக வெளிச்சமிட்டுக் காட்டப்படுவதில்லை.....அவசியமும் இல்லை.... ஆனால் ஒரு மரணத்தை ஊடகங்கள் மிகவும் பரபரப்பாக்கி இலாபம் தேடுவதும்....அரசியல் வாதிகள் அதில் அனுகூலம் தேடுவதும்......வீதியில் பாடையை போட்டு பிச்சை எடுப்பதற்கு சமம்...

தன் மழலையின் உயிருக்கு விலை பெற்ற பெற்றோர் செயல் மன்னிக்க முடியா குற்றம்...

எழுதியவர் : வை.அமுதா (15-Sep-20, 12:10 am)
பார்வை : 65

மேலே