காதலால் சுற்றும் வேலையால்
ஆடிடும் பாதங்கள் பதமாக
அதற்கொப்ப விழிகளும் அழகாக
அசையும் நளினங்கள் கலையாக
கோதையின் உருவமோ சிலையாக
காதையில் நீயே நாயகி
காவியத்தின் அழகு காதலி
கோளவிழி கொண்ட கோமதி
கொஞ்சும் பேச்சினில் பைங்கிளி
மஞ்சள் நிறங்கொண்ட மாங்கனி
மஞ்சரியை விஞ்சிடும் சுந்தரி
நெஞ்சுனுள் குடிகொண்ட கெளதமி
பொன்னொளி வீசிடும் பெளர்ணமி
கண்ணினால் கண்ட நாள் முதல்
பெண்ணின் பால் காதல் பூத்தது
அன்பினால் ஆசை அதிகரிக்க
ஆவலால் உன்னை காக்கும் காவலாள்
காதலால் சுற்றும் வேலையால்
காலங்கள் தடம்மாறி தவித்தன
தாகத்தில் உதவும் நீர் போலே
தாபத்தை தீர்த்திட காதலிப்பாய்.
------ நன்னாடன்.