வட்டநிலா வானில் வர

சுட்டெரித்தான் சூரியன் தந்தான் விடுதலை
வட்டநிலா வானில் வரமாலை யில்குளுமை
அட்டமிநி லாஅழகே பூவும்நா னும்விழியால்
தொட்டால் மலர்வோம் மகிழ்ந்து ! .

சுட்டெரித்தான் சூரியன் தந்தான் விடுதலை
வட்டநிலா வானில் வரகுளுமை -- பொட்டெழில்
அட்டமிநி லாஅழகே பூவும்நா னும்விழியால்
தொட்டால் மலர்வோம் மகிழ்ந்து !

---முறையே ஒருவிகற்ப இன்னிசை நேரிசை வெண்பாக்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Sep-20, 9:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே