வானத்து நிலா எங்கே

என் அழகு சிலையே
அலங்கார ஓவியமே
நிலவின் ஒளியில்
உன் அழகை ரசித்து
பார்க்க ஆசைப்பட்டு
வானத்தை பார்த்தேன்
வானத்தில் நிலாவை
காணவில்லை....!!

காரணம் என்னவென்று
எனக்கு புரியவில்லை
சற்றே யோசித்தேன்
வானத்து நிலவாய்
என்னருகே நீ நிற்க
உன் அழகில் மயங்கி
வான் நிலவு மூர்ச்சையாகி
மறைந்து விட்டதோ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (15-Sep-20, 9:08 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 199

மேலே