வைகோ அவர்களுக்கு பாராட்டுப் பாடல்
எழுகவே.... எழுகவே...கலிங்கப்பட்டி
கடமைவீரன் கரம்வலுக்க எழுகவே!
வருகவே..... வருகவே...வீறுகொண்டு
நம்தலையாரி வழிநடக்க வருகவே..!
மக்கள் நலம்காக்கும் மாரியம்மாள் மைந்தனை
மன்றத்தில் கர்ஜிக்கும் மல்லர்படை வேந்தனை
சங்கொலி முழங்கிடும் சாகித்திய சாகரனை
சாகா வரம்பென்ற சரித்திர நாயகனை
போற்றிப் புகழ்பாடி வலுசேர்க்க எழுகவே
வெற்றிக் கொடிநாட்டி அவன்வழிநடக்க வருகவே!
விருதுநகர் மக்களுக்கு இரும்புப்பாதை செய்தவனை
மாற்றுத் திறனாளியர்க்கு செயற்கைபாகம் ஈந்தவனை
குடியொழித்து மக்கள்மீட்க நடைப்பயணம் சென்றவனை
முடியெதிர்த்து சதிகாரங்களை அடிபெயர்த்து வென்றவனை
போற்றிப் புகழ்பாடி வலுசேர்க்க எழுகவே
வெற்றிக் கொடிநாட்டி அவன்வழிநடக்க வருகவே....
கொள்கை நிலைக்க பதிவிதுறந்த பிதாமகன் பீஷ்மனை
நீதி தழைக்க வாதம் செய்த நடுநிலை நக்கீரனை
கலைஞரின் மனம்கவர்ந்த சிறுதொண்டு நாயனை
கழகதோழர் நலம் காத்திடும் காத்தவராயனை
போற்றிப் புகழ்பாடி வலுசேர்க்க எழுகவே
வெற்றிக் கொடிநாட்டி அவன்வழிநடக்க வருகவே!
ஈழப் புலிகளுக்கு தோள்கொடுத்த தோழனை
சிங்கள படையெதிர்த்த சிம்ம வாகனனை
முக்கால் நூற்றாண்டை எட்டிய இளம்புயலை
எக்காலமும் ஏற்புடைய சிந்தைபடை புதுப்புனலை
போற்றிப் புகழ்பாடி வலுசேர்க்க எழுகவே
வெற்றிக் கொடிநாட்டி அவன்வழிநடக்க வருக...!
கவிதாயினி அமுதா பொற்கொடி