பேசும் மௌனம் மட்டுமே
நீ
அசைந்து வரும் நந்தவனம்
ஆடி வரும் தென்றல் காற்று
பூ விரியும் காலைப் பொழுது
புன்னகையின் புது வசந்தம் !
உன்
இருவிழிகள் திறந்தால் காதலின் புத்தகம்
இதழ்கள் மூடியிருந்தால் மௌனத்தின் தத்துவம்
இதழ்கள் மொழிந்திடின் செந்தமிழ் சிந்தும்
இருவிழியும் பேசிடின் பேசும் மௌனம் மட்டுமே !