மௌனம் ஒரு புத்தகமென்றால்
மலர் ஒரு புத்தகமென்றால்
-----இதழ்கள் அதன் பக்கங்கள்
மனம் ஒரு புத்தகமென்றால்
------உணர்வுகள் அதன் பக்கங்கள்
மௌனம் ஒரு புத்தகமென்றால்
------உன்விழி இமைகள் அதன் பக்கங்கள்
என்கவிதை ஒரு புத்தகமானதென்றால்
------உன் புன்னகை தந்த சொற்களால்
என்புத்தகம் இன்று பரிசு பெருகிறதென்றால் நீ
------ மெல்லிய விரலால் புரட்டி ஒரவிழியால் என்னைப் பார்த்ததால் !