கண்ணீர் அஞ்சலி ஆவுடையப்பன்

கண்ணீர் அஞ்சலி ஆவுடையப்பன்


கவிஞா் தெய்வம் கடவுளர் தெய்வம் ,(பாரதி,,)



குறள் வெண்பா
காவியமுன் ஓவியம் தீட்டவென் தூரிகை
தாவத் தடுக்கும் துயர் i



வெண்பா


ஆவுடையப் பன்நீன் பெயரில் பரம்வைத்தார்
தாவுமுன் னுள்ளம் கவர்காந்தம் -- பாவுமுன்முன்
போவுமுன் பாராட்டல் போவுமர்க்கு யேன்காலன்
காவுகொண்டான் நின்யின் உயிர்

ஆசிரியப்பா

வசந்த மங்கைநிலா சொன்னார் வாசம்நீ
எழுத்தின் சொத்தென அழுத்தினார் உண்மை
எழுத்தில் உன்னை பாவமறிந் திடார்யார்
பழனிக்கு மார்கவின் சாரல ருடன்கந்தன்
பழங்கவிதைப் புகழ்டாக்டர் கன்னியப்பன்
எல்லாம் நெருக்கம் சொன்னீர்
பன்முகம் உனக்கில்லை ஆயிரம் முகமே


தொடாப் பிரிவும் போற்றிடா எழுத்தருண்டா
நீபோற்றப் பூரித் தேற்றார் நண்பனாய்
சர்பானை விஞ்சிய ஆவுடை விளக்கம்
கற்பனை நிறைந்து நெஞ்சை யள்ளும்
சன்மார் கம்துணுக்கு பக்தி ஆன்மீகம்
சரித்திர இலக்கிய மருந்து ஒழுக்கம்
கலாச்சாரம் ஆத்திகம் நாத்திகம்
கலந்த நுகர்வை உன்னிடம் கண்டோமே


எழுத்தில் ஒர்வரிக் கிறுக்கலை உயர்த்திப்
பாராட்டி யீந்தாய் உந்தல் விளம்பரம்
அன்றாடம் கோயில் உண்டியலில் போடாதீர்
அன்றாடம் காச்சிக்கு போடெனப் புரடசியும்
மருத்துவ மனையட்டூ ழியம் பரப்பினாய்
நின்மறை தலுக்கழும் எம்மைத்
தேற்றுவர் யெவருண்டு சொல்லும் எழுத்தே

ஆரம்பப் பாட்டெழுத ஊக்கம் தந்த
ஆவுடை யப்பனே கலங்கரை விளக்கம்நீ
உன்போற்றல் எல்லார்க்கும்ஆற்றல் தந்தது
என்நா வாயுன்னால் ஆடாச் சேர்ந்தது
என்னெழுத் தரசியல் வெளிச்சம் காட்டவும்
தொலைபேசி பேச்சுத் தொடர ஆவுடைக்கு
விளக்கம் தந்தவென்னை பாட்டுப் போடுமென்றாய்
விளக்கப் பாட்டில் ஒன்றாய் கலந்தோம்
கருகிய செம்மலர் தமிழ்காக்கப் புறப்படு
இருபுத்த கம்நான் எழுதியதைப் படித்துப்
பின்னே திருவள்ளு வர்சைவமே நூலை
என்னை விரைவாய் ஆக்கச் செய்தாய்
அதைப் பலருக்கும் தந்து
என்பெருமை உயர்த்தி நீரும் மகிழ்ந்தாய்


அமெரிக்கப் பிள்ளைகள் வேண்டா மென்றிட
அமைதியாய் எழுத்தை கொஞ்சம் விட்டாய்
சென்ற பின்னே கம்ப்யூட்டர் ரிப்பேர்
ஐயமின்றி மீண்டும் எழுத்திற்கு வருவதாய்
வாக்கு சொல்லி அனைவரையும் விசாரித்தாய்
தோப்பு குற்றாலம் நல்லூர நெல்லையென
ஓடியேத் திரிந்த நீயும்
ஓடியொளிந் தாயில்லை அக்கொரா னாவுக்கே

வாரும் வாரும் என்றுநான் வாரம்
தோறும் தவறாது அழைப்பேன் செல்லில்
பத்து நாட்களுக்கு முன்நன்றாய் பேசியவர்
ரயில்வொயர் வாங்கிவரு வேனென்றார்

தளத்தில் ஆவுடையை எல்லாம் சொல்வர்
அன்னாரின் முகத்தை யாரும் கண்டதில்லை
நானுமேக் குரலைக் கேட்டவன் முகமறியேன்
ஏழுநாள்முன் உண்டுத் தூங்கியவர் எழவில்லை
காலன் கொய்தான் அப்பாரி ஜாதத்தை
டாக்டர் கன்னியப்பன் கூப்பிட்டுச் சொல்ல
நெஞ்சம் விம்மிடத் துடித்துக்கண் ணீர்மல்க
எல்லோர்க்கும் நானும் சொன்னேன்
இவ்வாரம் என்னிடம் பாரிஜாதம் பேசுமோ





எழுதியவர் : பழனிராஜன் (18-Sep-20, 7:41 pm)
பார்வை : 52

மேலே