பொறந்த ஊரு
----------------
கை பிடிச்ச பொஞ்சாதிக்கு
பொறந்த வீடு புகுந்த வீடு..
கை கொடுத்த கணவனுக்கு
பொறந்த ஊரு புகுந்த ஊரு..
புகுந்த ஊரு புடிச்சாலும்
பொறந்த ஊரு பொக்கிஷம்..
பட்ட படிப்பு முடிச்சதுமே
வேற வழி இல்லாம
பாதி மனச அங்க விட்டு
பிழைக்க வேற ஊர நாடி வந்து
வேலை தேடி வாழ்ந்தாலும்..
புகுந்த ஊரின் வாழ்வறிந்து
பெருமை பல பேசினாலும்..
பொறந்த ஊரை நினைச்சு வாழும்
ஆணுமொரு புது பொண்ணு..
---------------
சாம்.சரவணன்