முகநூல் பதிவு 113

நமக்கு நாமே நம் மனதோடு பேசிக் கொள்வதில் தனி சுகம் உண்டு
தனிமை தரும் இனிய தருணம் இது.....

காலக் கணக்கில்லை...
கழிவதும் தெரிவதில்லை...
கருத்துக்கும் முரண்பாடு வரப்போவதில்லை....
காரியங்கள் நிறைவேற்றுவதில் தடை ஏற்படுவதில்லை

உள்ளக்கிடங்கு உயிர் பெறும்....
உணர்வுகள் அழகாய் தாளம் போடும்.....
வண்ணக் கனவுகள் இசைபாடும்......
எண்ணக் கச்சேரி அங்கே அரங்கேறும்......

தானாய் அமைந்தால் சுகமோ சுகம்....
தண்டனையாய் திணிக்கப்பட்டால்
தவித்து துவண்டிடும் மனம்.....


கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (21-Sep-20, 4:06 pm)
பார்வை : 64

மேலே