பருவக்காற்று

வயசுக்குப் பசி தீர்க்க
மனதாரத் தழுவி .
உடலுக்குச் சூடு ஏற்றி.
உள்ளத்தில் காமத் தீ மூட்டி .
உணர்வைக் கொண்டு சிறையில் பூட்டி
உணர்ச்சியை விடுவித்து
உலாவிடும் பாதையைக் காட்டி./

பிண்ணிய நரம்பில் நெஞ்சம் எண்ணியவையெல்லாம் செலுத்தி.
வெப்ப மூச்சு வீசையிலே
அச்சம் கொள்வாயா?
என்று வினா எழுப்பி
ஓடும் குருதியை நிறுத்தி
உறுதிமொழி எடுத்து./

கணை தொடுத்திடும் கண்களுக்கு
பஞ்சணை மயக்கப் பட்டம் பெற்று
பூவாக நான் மலர்ந்து .
பொன்வண்டாக உன்னை அழைக்க
உன் இதழ் கொண்டு எனை நீ அளந்து.

இன்புறும் வேளையிலே
நெஞ்சணை எடை கொண்டு
உன்னை நான் எடை பாத்திட
வேண்டும் என்று பருவக் காற்று
பரிசம் போட்டுச் சென்றதடா நேற்று./

(ஓவியருக்கு வாழ்த்துகள்)
கிளுகிளுப்புக் கவிதை😜

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (22-Sep-20, 6:29 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 240

மேலே