உள்ளமதை வருத்தாமல்

உன் சேலை தொட்ட
இடையை நான் கிள்ளி
விட எத்தனிக்கையிலே
கள்ளியே நீ தள்ளியதும் ஏனோ?
நாணம் வந்து அணைத்ததோ?
மோகம் வந்து இழுத்ததோ?
இதில் எது வந்து உன்னை
அழைத்ததோ நான் அறியேன்.
என்னில் பப்பல
ஆசை வந்து துள்ளுது
அது உனை
அள்ளிடச் சொல்லுது.
பெண்ணியம் போற்றி
பெண்ணே உன்னை
நான் காப்பேன்.
என்னிதயம் போர்த்தி
நமது காதலை வளர்ப்பேன்.
உரிமை கொண்டு
உம்மைப் பெண் கேட்பேன்.
ஓர் உயிரினிலே
ஈருடலையும் புதைப்பேன் .
உன்னிதயம்
கொடுத்திடு பெண்ணே
என் உள்ளமதை
வருத்தாமல் கண்ணே.
(ஓவியருக்கு வாழ்த்துகள்)