பலங்குறையும் இதயந்தானே
தேனினை மருந்தாக்கி நோயினை தினந்தீர்க்க
தேவையான அறிவுதனை அறியேன் அய்யா
ஆயுதம் பழகியுள்ளேன் அரவினை அரட்டியுள்ளேன்
ஆனாலும் அடிமனதில் வெகு பயமே அய்யா
கடும் அனலில் வாழ்ந்துள்ளேன் கடி நகர் புகுந்ததுண்டு
கட்டுப்பாடு நிறைந்தயிடம் தவறை இழைக்கும் அய்யா
காற்றின் மீதேறி காணுமிடம் செல்ல வேண்டும்
கனவுகளில் வந்த எண்ணம் மெய்படுதல் நன்றுஅய்யா
நீரின் சாரத்தாலே நீண்ட உடலுக்கு வாழ்வு உண்டு
தெளி நீரை உடலில் செலுத்த தெளிவான வழிவுண்டோ
பதறும் செய்தியாலே பலங்குறையும் இதயந்தானே
பகட்டினை பழகிக் கொண்டால் பரிகாசம் சூழுமையா
அழியும் உடலினுள்ளே அழியாத ஆன்மா உண்டு
குறைவான வாழ்வை வாழ குறைமதி கொண்டோமே.
-------- நன்னாடன்.