சிரிப்பு நடிகர் வார்த்தைக்கு

இன்று வரை எட்டுக் கொலை வழக்கு
இருபத்தெட்டு கற்பழிப்பு வழக்கு
நாற்பத்து மூன்று வழிப்பறி வழக்கு
தொன்னூற்று ஏழு கட்டப்பஞ்சாயத்து வழக்கு
அனைத்தும் காவல்துறையினருக்கு அத்துபடி
குற்றவாளிக்கு எதிராக குற்றம் சுமத்துவோரில்லை

குடிபோதையில் தலைமைக் காவலரின் மனைவியை
தாக்குறைவாய் பேசிய போதை ஆசாமி
குண்டர் சட்டத்தில் குண்டுக் கட்டாய் கைது
குளத்துக் கரையில் களைப்பில் உறங்கிய
முதியவர் சந்தேகத்தின் பேரில் கைது

தேசியக் கொடியை ஏளனித்து கருத்திட்ட
சிரிப்பு நடிகர் வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டால்
சிறைப்படுத்த வேண்டிய உத்திரவை விலக்க
சிறப்பாய் தீர்ப்புக் கூறும் நீதிமன்றம் ஆலோசனை
சிந்தித்து கூறுவதாக சிரிப்பு தரப்பு தீர்மானம்

விசாரணைக்கு அழைத்து சிறையில் கொலை
விடிய விடிய விசாரணையில் உடல் பாதிக்கப்பட்டு
வினாடி நேரத்தில் மரணம் ஆளுவோர் அறிவிப்பு
காவல்துறையினர் கிஞ்சித்தும் பயமின்றி நாயகராய்
ஊடகத்தால் உண்மை வெளிப்பட்ட அவலம்

எல்லாம் வெளிப்படையாக்கும் 21ம் நூற்றாண்டில்
எல்லையில்லா பொய்கள் கூறும் ஆட்சியாளர் வர்க்கம்
எவை நடந்தாலும் கவலைப்படா குடிமக்கள் கூட்டம்
எல்லாவற்றையும் பணமாக்கும் ஊடகக் கோட்டம்
எங்கு போய் முடியும் இவ்வுலக வாழ்க்கை போராட்டம்
-------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (22-Sep-20, 11:26 am)
பார்வை : 130

மேலே