காந்தி ஜெயந்தி

--------------------
காந்தி ஜெயந்திக்கு
அம்மகான் துதி போற்றி
கவி பாட துணிவில்லை..
அம்மகான் கண்ட கனவு
கனவாகவே இருப்பதினால்..
என் கவியில் அவர் துதி பாட
அதை கேட்டு அவர் ஆன்மா
ஆனந்தமாய் எழுந்து வந்து..
பகவத் கீதையின் மேல்
சங்கடமின்றி சத்தியம் செய்து
பாரதத் தாயை கூறு போடும்
பாவிகள் நிறைந்த தேசமதை
தான் கண்டு மனம் கலங்கி
மறித்து விடுமோவென்ற
என்னுள் எழுந்த ஐயத்தினால்..
கால் முளைக்கா பிஞ்சு முதல்
கால் அயர்ந்த கிழவி வரை
காமப்பசிக்கு இரையாகும்
இறையாண்மை இல்லா இம்மண்ணின்
இன்றைய நிலை கண்டு
அவர் ஆன்மா துடிதுடித்து
போகுமென்ற என் ஐயத்தினால்..
துதி பாடும் வரிகள் யாவும்
தொண்டைக்குள் அடக்கி வைத்தேன்..
அவர் ஆன்மா ஆழ்ந்து உறங்க ..
-------------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (2-Oct-20, 8:44 pm)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 46

மேலே