பெண்ணின் வேண்டுகோள்

-----------------------------
உன்னை விரும்புகிற
பெண்ணை கூட அவள்
விருப்பமின்றி தொடாதே..

உன் கை பிடித்த
மனைவியை கூட அவள்
மறுக்கவுன் சுகம் தேடாதே..

ஐந்தறிவு ஜீவன் கூட
தன் குட்டி யொத்த
சிசுவில் காமம் காணா...

ஆறறிவு ஜீவன் நீ
ஏதுமறியா பிஞ்சில்
காமம் காண்கிறாய்..

யாரோ பெற்று
சீராட்டி பாராட்டி
செல்லமாய் வளர்த்த
பெண் பிள்ளையை
கூட்டமாய் சேர்ந்து சீரழிக்க
உன்னை பெற்ற தாய்
அனுப்பி வைத்தாளோ?

கூட்டமாய் சேர்ந்துவுன்
தாயையோ உடன்பிறந்தோளை
உன் போன்றோர் கற்பழித்து
உயிர் ஊசலாட தூக்கி எறிந்தால்
உன் மனது ஏற்றிடுமா?

செய்தியில் படிக்கையிலே
எம்மனது துடிக்கிறது..
கசக்கி எறிந்த காகிதம் போல்
தூக்கி எறிந்த பிள்ளை கண்ட அவள்
பெற்றோர் மனது தாங்கிடுமோ?

தன் பிள்ளையை தரங்கெட்டு
வளர்த்த தாய் தந்தை சேர்த்து
அவனுக்கும் தண்டனை கொடுக்க
குற்றங்கள் குறைந்திடுமாயின்
சட்டத்தை உடன் திருத்தி
இரு சபைகளில் ஏற்ற
இருகை கூப்பி கேட்கின்றோம்...
--------------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (3-Oct-20, 6:49 am)
Tanglish : pennin ventukol
பார்வை : 1955

மேலே