இதயத்தின் குரல்
காலம் பொன் போன்றது,
ஜாக்கிரதை! சோம்பல்
அதை திருடி விடும் .
உனக்கு நேரம் இருந்தால்,
காலத்திற்காக
காத்திருக்காதே.
காலம் பொன் போன்றது,
அதை சோம்பலிடம்
அடகு வைக்காதே.
இன்றைய நிஜத்தை
நேற்றைய நினைவில்
தொலைக்காதே,
நாளைய கனவில் கலைக்காதே
துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு,
ஆனால் அது கற்பித்த
பாடத்தை மறந்துவிடாதே.
அறிவுரையை எப்போது சொல்கிறார்கள்
என்பதைவிட, யார் சொல்கிறார்கள்
என்பதே முக்கியம் .
ஆறுதல், இதை யார் சொல்கிறார்கள்
என்பதைவிட எப்போது
சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம்."
------
LAKSHYA