இதயத்தின் குரல்
'நாக்கை' அடுக்கி
வைத்துக் கொள்ள வேண்டும்,
இல்லாவிட்டால் அது
நம்மை அடக்கி விடும்.
அறியாதவனுக்கும் அதிகம் தெரியும்
எப்போது என்றால்,
அவன் தன் நாக்கை
அடக்கி வைத்திருக்கும் போது.
இருப்பின் மௌனமாய்
இரு, பேசுவதாயின்
மௌனத்தை காட்டிலும்
சிறந்ததாக பேசு.
'மௌனம்' ஒரு நூதன ஆயுதம்
அதை பயன்படுத்த
முட்டாளுக்கு தெரியாது.
முட்டாள் முதலில் கற்பது
' தெரியாது' என்ற
வார்த்தையைத்தான்.
எப்போது கேட்க தொடங்குகிறாயோ,
அப்போதே பேச கற்கிறாய்.
கேட்கும்போது வேகமும் ,
சொல்லும்போது விவேகமும்,
கொண்டவனே அறிவாளி.
நீ அறிவாளியாக வேண்டுமா?
உன் காதுகளை பேச விடு.
தேன் தேன் என்று கத்தினால்
வாய் தித்திக்காது,
தீ தீ என்று கத்தினால் எதுவும் பத்திக்காது.
ஒரு சொல் அன்பை வெல்லும்,
ஒரு சொல் 'அறிவையே'
கொல்லும்.
வாள் வீச்சை விட
'வாய் வீச்சுக்கு' வலி அதிகம்.
------
LAKSHYA