பாடும் நிலாவுக்கு ஓர் அஞ்சலி

பாடு நிலா ஓய்வு எடுத்தது.
பாடாய்ப் படுத்திய நோய்
வென்று முடித்தது.
கூடு வீட்டு உயிர் பறந்தது.
கூடி மகிழ்ந் உறவுகள்
எல்லாம் கூக்குரல் பாடுது.


சிகரத்தை சாய்த்து விட்டது.
சங்கீதம் ஒன்று விண்ணோடு
சங்கமமானது.
கொரோனா வென்று விட்டது.
நாதத்தைக் கொன்று விட்டது.


ஏழு ஸ்வரத்துக்குள்
உலாவிய ஜீவன்.
எழுந்து வந்திடாமலே
உறக்கம் கொண்டது.
ஆராரோ பாடிய தாய்மைக்
குரல் அமைதி கண்டது.


காதல் இசையாய் நம்
இதயத்தை எந்நாளும்
ஆளுகின்றது.
காதிலே மௌனகீதம் ஓதி மயக்கத்தைத் தந்து சென்றது.

பக்திப் பாடலாய் சுற்றி
வந்திடும்.
பாமரர்களோடும் பழகிச்
சென்றிடும்.
மூச்சுப் பறந்தால் என்ன
என்றோ நமது மூச்சோடும்
கலந்து விட்டது .
உழைப்பாளிக்கு ஊக்கம்
கொடுத்த காந்தக் குரல்
கதவு அடைத்துச் சென்றது.


இறந்தும் வாழும் ஜீவன் S.P.B
இசையை ஆண்ட ஜீவன் s.p.B
இல்லத்திலும் உன் குரலே
உள்ளத்திலும் உன் நினைவே
மரணம் என்பது இயற்கையே
மரணித்த காலம் தான் கொடுமையன காலமாகிப் போனதே.


மண்ணுலகை தாலாட்டியது
போதும் என்று
எமன் விண்ணுலகுக்கு
அழைத்துச் சென்று விட்டானோ.
எங்கு சென்றால் என்ன
யார் கொண்டு சென்றால் என்ன

மண்ணில் என்றும் நிலா உலாவும்
தேன் சிந்தும் இசையாய் மலரும்.
மறையாத பேரோடு மறவாத உயிராக
இறவாத வரத்தோடு வாழும்
உலக மக்களெல்லாம் என்றென்றும்
பாலு ஐயா நாமம் பாடும்.

மிகுந்த வேதனையோடு
ஆழ்ந்த இரங்கல் ஐயா
குடும்பத்தாருக்கு இறைவன்
தான் தைரியம் கொடுக்க வேண்டும்.😭

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (2-Oct-20, 7:25 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 204

மேலே