அவள் கண்கள்
வயல் வெளியில் அவள் புது
நெல் விதை விதைக்க வந்தாள்
அங்கு சேற்றில் துல்லிய கயல்கள்...
என் இப்படி வானை நோக்கி துள்ளுகின்றன
என்று எண்ணினான்... புரிந்தது இப்போது
விதை விதைக்கும் அவள் கண்களை
ஏதோ புது கயல்கள் விண்ணிலிருந்து
மண்ணில் வந்து இறங்குதோ என்றெண்ணி
சேற்று கயல்கள் துள்ளின.....