காதல் மழை
சில்லென்று பெய்யும் மழை நெஞ்சுக்கூட்டில் குளிரூட்ட
நாம் இருவரும் ஒரே குடையில் ...
உன் இடக்கை என் தோளை அழுத்தி
உன் பக்கமாக அணைத்து இருக்க...
என் வலக்கை உன் இடையை வளைத்து
என் கண்ணம் உன் மார்பில் சாய்ந்திருக்க ...
நனையாமல் நனைந்து இருவரும் கதைக்க...
விடா மழையின் குளிரிலும் உன் பேச்சும் உன் மூச்சும் தரும் கதகதப்பில்
சொக்கித்தான் போகிறேனடா ....
- தூயா