ஊமை நாடகம்

உருவமிலா உணர்வுக்கு உச்சமான ஈர்ப்புண்டு
ஊழல்களின் உறைவிடமே உயருகின்ற பதவிக்கல்
தகுதி தரம் பார்க்கவில்லை தொகுதிவாரி செல்வாக்கு
தன்னம்பிக்கை தளராதே தருணங்கள் தவறவில்லை

ஏறப்போகும் ஏணியிலே துவேசத்தின் தூதுவராய்
எந்நாளும் படிகளிலே தடைக் கல்லாய் உலவுகிறார்
நாட்டு நடப்பில் நாள் தினமும் அரங்கேறும் நாடகத்தில்
நல்லவர் யார் நாசக்காரர் யார் நானறிய கூடவில்லை

அறம் துறந்து அநீதிகளை அவிழ்த்து விட்டார்
அவணியிலே ஆட்டம் ஆடி ஓட்டம் காட்ட
நீதி தேவன் நினைத்திருப்பான் அவன் சத்தியத்தை
நிலை நிறுத்த இடமளியா நிதர்சனத்தின் நிழலாட்டம்

படித்திருந்தாய் பணமில்லை பயனில்லா சான்றிதழும்
பதவிக்கு பரீட்சையென பழகிப் போன புதினங்கள்
நிச்சயத்தை உறுதி செய்யா நிழல்கட்சி கூட்டத்தினர்
நிதி அளித்தால் நிலை தருவார் தொழில் வாய்ப்பு சந்தையிலே

பொழுதேதும் தவறாமல் சூழ்நிலையின் சுழற்சியிலே
நாயகரும் நாயகியும் குரலிழந்த நாடகம் போல்
நாவடங்கி அநீதிக்கு குரல்வளையை பரிசளித்து
கூனி குறுகி நடத்துகிறாய் ஊமத்தின் கூத்துதனை

எழுதியவர் : thedsanamoorthy karitharan (sampur samaran) (5-Oct-20, 5:38 pm)
Tanglish : uumai naadakam
பார்வை : 189

மேலே