காலமும் புலவர்களும்
சங்க கால புலவர்கள்
தங்களது இலக்கியங்களை
ஓலை சுவடியில்
எழுத்தாணிக் கொண்டு
படைத்தார்கள்...!!!
சம கால புலவர்கள்
தங்களது இலக்கியங்களை
பேனா பேப்பர், மைபுட்டி
இவைகளை கொண்டு
வெட்ட வெளியில் அமர்ந்து
இயற்கையை ரசித்தபடி
கற்பனையை கலந்து
படைத்தார்கள்...!!!
நவீன கால புலவர்கள்
நான்கு சுவற்றுக்குள்
கணிப்பொறி முன்னால்
அமர்ந்து கொண்டு
தங்களது கற்பனைகளை
வகைப்படுத்தி
விசைப்பலகையின்
உதவியுடன் தங்களது
இலக்கியங்களை விரைவாக
படைத்தது விடுகிறார்கள்...!!
--கோவை சுபா