Big boss - 4

பிக்பாஸ் - 4

மய்யம் மாயமான காரணத்தால்
பிக்பாஸா
அரசியல், இயற்பியல், சமூகயியல்
காந்தி, பெரியார், காமராஜ்
எல்லாம் என்னாச்சு
வெறும் சொல் விளையாட்டா
புதிய தமிழகம்
புதிய விடியல்
நம்மவர், ஆண்டவர்
நயம்பட பேசியது
என்னவாயிற்று
கட்டசின்னா சும்மாவா
காசு,பணம் வேணாமா
அதான் பிக்பாஸ்
கக்கன் தெரியுமா
ஜீவா தெரியுமா
நல்ல கண்ணு தெரியுமா
கரைபடாத கரங்கள்
பணம் இல்லாமலே அரசியல்
செய்தவர்கள்
சுப்பரமணி சுவாமி
கூத்தாடி
என்று கிண்டல் செய்தால்
கோபம் வருகிறதே
உண்மை அதுதானா
சுகமான வாழ்க்கை
சொகுசான வாழ்க்கை
கோடியில் புரள்வது
சமூக சேவை தானே
அது தேர்தல் சமயத்தில்
பார்த்து கொள்ளலாம்
என்ன கொள்கை
புடலங்கா கொள்கை
என்ன லட்சியம்
லட்சத்தை விட
லட்சியம் முக்கியமா
இது என்ன கூத்து
பின்ன கூத்து
கூத்தடிக்கும்
கும்மாளமிடும்
சரி பிக்பாஸ் சீசன் 4
அது என்ன சீசன் 4
ஆண், பெண் சிலரை
ஒரே வீட்டில் அடைத்து
அவர்கள் அந்தரங்கத்தை
வெளிச்சம் போட்டு காண்பிப்பது
பிக்பாஸ்
கருமம்...
நாலு சுவற்றுக்குள்
நடக்கும் விஷயத்தை
இப்படி வெளிச்சம் போட்டு
என்ன கண்ராவிடா
இதுக்கு ரேட்ங்
பாருங்க...
அய்யோ
தலை சுத்தது
எவனோ ஆயல் நாட்டுக்காரன்
வாந்தி எடுத்ததை
இங்கே இவர்கள்
அதே பாணியில்
அரங்கேற்றம் செய்கிறார்கள்
சுயபுத்தி இல்லை
இதற்கு
கலைஞானி
தலைமை
வேதனை
வெட்கம்
"அந்த நாலு பேர்"
"அவர்களின் அந்தரங்கம்"
"கோமாளிகளின் கூத்து"
இப்படி பெயர்
வைப்பதை விட்டுவிட்டு
பிக்பாஸ்ஸாம்
பாஸ் என்றால் தலைவன்
பிக்பாஸ் என்றால்
தலைவனுக்கு எல்லாம்
தலைவன்
எதாவது பொருந்ததுதா
பிக்பாஸ்:-
ஆடை குறைப்பு
அந்தரங்க வாழ்க்கை
கலாச்சார சீர் கேடு
பண்பாடு சிதைவு
பெண்களை இழவு செய்தல்
போலியான வேஷம்
வருங்கால சந்ததியரை
படுகுழியில் தள்ளுதல்
கமல்
நீர் என்ன தான் ஒரு புரியாத
விளக்கம், சமாதானம்
கூறினாலும்
இந்த நிகழ்ச்சி
ஒரு தரம்கெட்ட
குப்பை.
கமல்
மய்யம்
காணவில்லை
- பாலு.

எழுதியவர் : பாலு (5-Oct-20, 11:03 pm)
பார்வை : 60

மேலே