உன்னுள் உறைகின்றான் உன்குரு
உன்னுள்ளே உனக்காகவே உன்னை கடைதேத்த
உனக்கொரு ஆசான் காத்திருக்க நீயோ
ஒன்றும் அறியாது குருவைத் தேடி
எங்கெங்கோ அலைகிறாய் கொஞ்சம் நீயார்
என்பதை உன்னையே கேட்டுப்பார் பதில்
கிடைத்தால் பதில் தந்தது உனக்காக
காத்திருக்கும் உன்குரு அறி