வல்லரசு

வல்லரசு
நேரிசை ஆசிரியப்பா
நாமே எல்லாம் கண்டோம் சொன்னோம்
நமதுலகம் பந்தென யெவர் சொன்னார்
சூரிய வியாழசனிக் கோளின் தூரம்
பாரில் முன்னுரைத் தவர்யார் நாமே
நாமே பாரத ரிஷிமுநி யிடங்கற்றோம்
நாட்டைப் பிரிக்கும் திராவிடச் சண்டாளன்
நமக்குச் சொல்வானா ரிஷிமுநிப் பேரை.
பாரதப் போரில் பலகணைகள் கையாண்டார்
தொடுத்தார் குறிபார்க்கா தூரக் கணைகள்
வாயு அக்னி புயல்விஷக் கணைகள்
செய்முறை வெளியே சொல்லா மறைத்தார்
போகரிஷி யால்சீனம் வெடிகுண்டு கண்டார்
போனார் சீனம் தைமூரும் செங்கிஸ்கான்
போனவர் கற்றார் வெடிகுண்டு பீரங்கி
இப்படி இவரே உலகழித்தார்
உலகை காக்கயெ வரும்நினைத் தாரிலையே
Xx