அன்புக்கரங்கள்

அன்புக்கரங்கள்

கரங்கொண்ட மாக்க ளுருசெய்த தும்யெம் கட வுளென்பர்
கரங்கொண்ட மாக்க ளுமறத்திற் கன்று அடித்துவுண்ணும்
கரமெட்டாக் டோபஸ் கடல்வாழ்மா நஞ்சு செலுத்தியுண்ணும்
கரங்கொண்ட. சிங்கம் புலியுங்கூட கொன்று புசிக்கவுமே


கரடிக்கு ரங்கும் கரத்தினால் காயப் படுத்திடும்சொல்
கரங்கொண்ட மானு டனும்தெய்வம் போற்றி வணங்குவனாம்
கரத்தைக்கு வித்து வணங்கிச்செய் வானே பலவுதவி
கரங் குப்பி யன்பாய அறஞ்செய்தல் போற்ற லுடன்சிறப்பே


மா. ==. விலங்கு கடுமா பொல்லா விலங்கு. மாக்கள் விலங்குகள்


வில்லால் வதைத்த விஜயனால் கண்ணனின்
சொல்லால் பரஞ்சென்றார் தீயபலர் -- சொல்காத்து
வில்லம்பை விட்டிடா வள்ளல் கரமதை
நல்லுள்ளம் போற்றி டுமே


Xx

எழுதியவர் : பழனிராஜன் (10-Oct-20, 4:11 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 75

சிறந்த கவிதைகள்

மேலே