பிடுகின் ஊடே தெரிகின்ற மின்னாலாய்
இவ்வுலக நிகழ்வால் என் மனம் இழிஞனாய் எண்ண
வறுவிலி நிலையில் மக்கள் வாடுவதைக் கண்டு
ஒக்கல் உடன்பிறந்தோர் நண்பர் யாவரும்
ஒரு போதும் நலன் பாராட்டாமல் ஏளனம் செய்ய
நொவ்வலால் என் உடலும் நோயுற்று இளைக்க
கரும் மங்குல் சூழ்ந்து பெரும் மாமழை பொழிந்ததால்
நெல் தானியங்கள் விளையும் தரமான வயலில்
பொன்னே விளைந்து புது வாழ்வை தந்தார் போல்
நூல் பல கற்று முகரிமை பெற்று மேநிலை அடைந்தால்
விளைந்த பெருளை வாங்க தரகு பேசும் நூழிலராய்
குறைந்த நிலை கூலிக்கு சிறந்த வேலையைத்தர
புடையல் பல கட்டி புடைசூழ நின்று வரவேற்கும்
புரவலர் மனங்கண்டு நம் மதுகைக்கூட்டினால் மட்டுமே
பிடுகின் ஊடே தெரிகின்ற மின்னாலாய்
நம் வாழ்வு செழிக்கும் முகரிமையும் கிட்டும்.
----- நன்னாடன்.