மதுகை வளர்த்தால்

கதிர் மறைத்த மங்குல் கரைபுரல பொழியின்
பழனம் செழித்தெழுந்து புவனம் சிறக்கும்
கேளிர் யாவரும் உணவு தானியம் புசிக்க
நூழிலர் நடுவோடு வாணிபம் செய்தால்
வறுவிலிகள் இல்லா வளமாய் மாறும் இப்புவி
இக்கொள்கை கொண்டே மதுகை வளர்த்தால்
இழிஞன் சிறந்தோன் வறுவிலி வளத்தான் பேதம்நீங்கி
நொவ்வல் களையும்போது கற்றோர் போற்றி
சீர் புடையலை தடத்தோளில் சூட்டும் போது
நட்போடு ஒக்கல் சூழ்ந்து உவகையடையும் நிகழ்வு
பெரு வெளிச்சம் ஈனும் அதிர் பெடுகு ஆராவாரம்போல்
ஓவலாய் உள்ளத்திற்கு நீள் இன்பச்சாரல் சொரியுமே.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (28-Oct-20, 7:26 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 40

மேலே