பலதாய் பலவகையாய்

எள்ளுக்காய் இருப்பதைப் போல்
கொள்ளுக்காய் இருப்பதில்லை
சொல்லுக்காய் துணிந்து சொன்னால்
தூயமுடிவு கிடைக்காதே.

விண்ணில் காய் காய்ப்பெதெல்லாம்
மினுக்குவதாய் தெரிகிறது
அணுக்கமாய் இல்லா உறவு
வானவில் போன்றதே.

பாகற்காய் பெருங்கசப்பு
பலக்காய் கொள்ளுவதில்லை
பாகற்காய் குணங்கொண்டோர்
பாரினிலே செறிவு அதிகம்.

அவுரிக்காய் அடர் நீலம்
குடைமிளகாய் காரம் இல்லை
குடைமிளகாய் அவுரி போலே
கோடி மாந்தர் பாரினிலே.

வேலங்காய் இசையை கொடுக்கும்
வெள்ளெரிக்காய் குளிர்ச்சித் தானே
கருக்காய் நெல்லில் உண்டு
கலியுக மனிதர் குணம் இதுவே.
-------- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (23-Oct-20, 9:50 am)
பார்வை : 52

மேலே