நினைவுகள்

வீட்டின் உள்கூடத்தில் இருந்த முக்காலியை கழுவதற்கு எடுத்தாள் வேலைக்காரி ஆண்டாள். எடுக்காதே எடுக்காதே எனக் கத்தினாள் எசமானி ரத்னா .ஏன்மா ஒரே அழுக்கா இருக்கே கொஞ்சம் அழுக்கானாலும் கழுவ சொல்வீங்களேம்மா எனக்கூறி ரத்னாவை வியப்புடன் பார்த்தாள் ஆண்டாள். அந்த முக்காலியை கண்களில் நீர்ததும்பி ஆசையாய் ஆனந்தத்துடன் தொட்டு தடவினாள் ரத்னா.ஒரு வாரத்திற்கு முன்பு தான் மகளும் பேரனும் வந்து போனார்கள். பேரனுக்கு இரண்டு வயதுதான் ஆகிறது. அம்மம்மா அம்மம்மா என மழலை மொழியில் அழைத்தது காதில் ரீங்காரமாய் கேட்கிறது. மகள் அடிக்கடி வருபவளும் அல்ல.
வேலை வேலையென பறந்துக் கொண்டிருப்பவள்.
அத்தி பூத்தாற்போல்தான் அவள் வருகை இருக்கும் என மனதிற்குள் நினைத்தவளை மீண்டும் அம்மா என்ற குறள் நினைவிலிருந்து விடுபடச் செய்தது.ஏம்மா முக்காலியை கழுவவேணாம்னு சொல்றீங்க அதுவா ஆண்டாளு என் பேரன் அம்மும்மா சோன்(போன்) குடு
தம்பி பொம்ம வரட்டான்னு போன்ல பொம்ம படம் பாத்து சொன்னான் சரிடி பட்டுனு சொல்லி அவனிடம் நீல மை பேனா கொடுத்தேன்
இங்கப்பாரு வட்டவட்டமா என்னன்னவோ வரைந்திருக்கிறான்
அதுல என்னையே பாக்குறேன் என் பேரன் என்னைப் போலவே இருக்கான் பாரு( பேரன் அவனது தந்தைப்போல் இருப்பான் இருந்தாலும் அவள் சொல்லும்போது யாரும் மறுக்க மாட்டார்கள்)
அவன் ஞாபகம் வந்தால் இத தொட்டு தொட்டுப் பார்க்குறேன் சந்தோசமா இருக்கு அதக் கெடுத்துடாத நீ என வேலைக்காரியை
விரட்டினாள் ரத்னா.கண்களில் கண்ணீர் பெருகியது .கணவன் இறந்தப்போது இருந்த துயரத்தை விட பேரனை பிரியும்போது மனதிற்குள் துயரம் அதிகமாக இருப்பதாக அவளுக்கு தோன்றியது.அடுத்த முறை மகள் பேரனோடு வரும்வரை அந்த முக்காலியை கழுவப் போவதில்லை என ஏற்கனவே மனதிற்குள் தீர்மானம் எடுத்து வைத்திருந்தாள் ரத்னா

(பின் குறிப்பு: பெற்ற பிள்ளைகள் எங்கு இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தால்போதும் என நினைத்து அவர்களின் நினைவுகளை மனதில் சுமந்து வருகைக்கா காத்திருக்கும் வயதான உள்ளங்கள் ஆயிரமாயிரம்)

எழுதியவர் : உமாபாரதி (28-Oct-20, 7:33 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : ninaivukal
பார்வை : 297

மேலே