என்னை யாருடா ரவுடின்னு சொன்னவன்

என்னை யாருடா ரவுடின்னு சொன்னவன்?
@@@@@@####
பத்து பதினைந்து இளைஞர்கள் மரத்தடியில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் திரை ரவுடிபோல ஒருவர் சென்று கொண்டிருக்கிறார்கள். அவரைப் பார்த்ததும் நண்பர் கூட்டத்தில் இருந்த நடராஜன் "அங்க போறானே அவன்ப் பாருங்கடா" என்றான்..

மற்றவர்கள் "யாருடா அவன்?" என்று கேட்டனர். "அவனா, அவன் பெரிய ரவுடிடா. வழிப்பறியிலும் போதிய அனுபவம் உள்ளவன். அவன் மேலே
நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் ஏராளம். அவன் பேரு முட்டைக்கண்ணு முருகையன்", இவ்வளவுதான்டா எனக்குத் தெரியும்".

@@@########
அந்த நண்பர் கூட்டத்தை நோக்கி வந்த ரவுடி "என்னை ரவுடின்னு எவன்டா சொன்னவன்?"

@@@@@@@
அய்யா ஆனந்தன் தெரியாம சொல்லிட்டான். அவனை மன்னிச்சுக்குங்க.
#@@@@@@
காவல் நிலையத்துக்கு தகவல் சொன்னா உங்களுக்கு லாக்அப் நிச்சயம். தேர்தல் நெருங்குது. இந்த நேரத்தில பிரச்சினை வேண்டாம். உங்கள மன்னிக்கிறன்.

நான் எப்பவுமே ரவுடிதான்டா. நேற்று, இன்று, நாளை. ரவுடித்தனம் என்னோட பரம்பரைச் சொத்துடா பசங்களா. இப்ப நான் அரசியயல்வாதி.

நான் பிரபல ரவுடி 'முட்டைக்கண்ணு முருகையன்'ன்னு தெரிஞ்சும் ஒரு செல்வாக்குள்ள அரசியல் கட்சியிலிருந்து அழைப்பு வந்தது. அந்தக் கடசில சேந்துட்டேன். என்னுடைய செல்வாக்கப் பாத்துட்டு அந்த கட்சில நம்மா மாவட்டத்தின் கட்சித் தலைவரா நியமனம் செஞ்சிருக்காங்க. அங்க பாருங்க. கட்சிக் கொடியோட ஒரு காரு நிக்குதே அது கட்சி எனக்குத் தந்த கார். இப்ப நடைப்பயிற்சி போயிட்டு இருக்கிறேன்.

கட்சில சேந்த ஒடனே 'முட்டைக்கண்ணு முருகையன்'ங்கிற எம் பேர மு.க. முருகையன் அதிகாரப் பூர்வமா மாத்தச் சொல்லி எங்க கட்சித் தலைவர் சொன்னாரு..நானும்
மு.க. முருகையன் ஆயிட்டேன்.

சரி நீங்க எல்லாம் எதுக்கு இங்கு வெட்டிய பொழுதைப் போக்கிட்டு இருக்கிறீங்க?

@@@|||
அண்ணே நாங்க எல்லாம் பொறியியல் பட்டதாரிங்க. பலதடவ விழுந்து புரண்டு பல்டி அடிச்சு அதிர்ஷ்டவசமா தேர்ச்சி பெற்றவங்க.
எந்த வேலையும் கெடைக்கில.

கவலைப்படாதீங்கடா பசங்களா. உங்களுக்கு நான் உதவறேன். நாளைக்கே என் அலுவலகத்துக்கு வாங்க. உங்க ஒவ்வோருத்தனுக்கும் தினம் ஆயிரம் ரூபாய் சம்பளம் தர்றேன்

என்ன வேலைங்க அண்ணே.

தம்பிங்களா நான்.ரவுடித் தொழில்லயும் வழிப்பறிக் கொள்ளையிலும் கோடிக்கணக்கில சம்பாதிச்சு வச்சிருக்கேன். கட்சி நிதியும் எக்கச்சக்கமா கெடக்குது. அதையெல்லாம் வச்சுகிட்டு என்ன செய்யறது? நாளையிலிருந்து நீங்க ஒவ்வொருத்தனும் ஒரு வார்டுக்குப் பொறுப்பு.

ஒரு நாளைக்கு இருநூறு வீடுகளுக்கு போயி ஒவ்வொரு வீட்டிலயும் பத்து நிமிசம் உக்காந்து நான் குடுக்கிற அச்சடிச்ச ரண்டு பக்கத்தாள்ல ஏராளமான பொய் வாக்குறுதிகள் இருக்கும். அதை
எல்லாம் அந்த வீட்டில உள்ளவங்கள
நம்பவைக்கணும்.

வீட்டுக்கு அஞ்சு ரூபாய் வீதம் இருநூறு வீட்டில விதவிதமா பொய்பேசி பிரச்சாரம் செஞ்சா ரூ. 200× 5 எவ்வளவு?

ஆயிரம்.

ஆமாம் ஒவ்வொருத்தனுக்கும் ஆயிரம் ரூபாய் ஒருநாள் சம்பளம்..",நாங்க எல்லாம் வேலையில்லா பட்டதாரிங்க. அண்ணன் மு.க. முருகையன் ஜெயிச்சா உங்க பிரச்சினைகளையும் குறைகளையும் தீர்த்து வைப்பாருங்க. உங்க வீட்டிலயும் வேலையில்லாதவங்க இருந்தா அவுங்களுக்கு அரசு வேலை நிச்சயம்" னு உறுதிமொழி குடுங்கடா.

என்னை எதுத்து நிக்கிறவனுக்கெல்லாம். டெபாசிட் போகணும். பாதிப்பேரு நோட்டாவுக்கும் கீழே கெடக்கணும். இது நடந்தா உங்க எல்லாருக்கும் தகுதிக்கு தகுந்த வேலை. என் தாய்மேல் ஆணை. தமிழ்மேல் ஆணை. நான் வணங்கும் பழனி முருகப்பெருமான் மீது ஆணை.

சரிங்க அண்ணே, நீங்க சொல்லறபடியே செய்யறோம்.

நாளைக்கு வெள்ளிக்கிழமை. நல்ல நாள். பத்து மணிக்கு வாங்க பூசை பண்ணீட்டு பிரசாதத்தோட பிரச்சாரத்துக்கு புறப்படுங்க.

சரிங்க அண்ணே.

அண்ணன் தங்கத் தலைவன் மு.க. மருகையன்

வாழ்க!

அண்ணன் தங்கத் தவைவன் மு. க. முருகையன்

வாழ்க! வாழ்க!

எழுதியவர் : மலர் (31-Oct-20, 7:39 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 117

மேலே