காந்த கண்கள்
உன் கண்களில்
என்னை கண்டேன்...
அதன் பின் என் உருவம்
காந்தமாக உன் கண்களோடு
ஒட்டி கொண்டு விட்டது ....
எனக்கும் உன்னிடம் இருந்து
பிரித்து எடுக்க மனமில்லை..!!!
நீ காந்த கண்ணழகி என்பது
புரிந்து விட்டது எனக்கு...!!!
--கோவை சுபா