வண்டிற்குண்டு கேட்பாஸ்

வாச மிகுமலரின் தேனைவா சத்தினை
கூசா மலெடுத்துச் சென்றிடும் பூவண்டே
வாசலில் நிற்கும் வசந்த மலராள்
அனுமதி பெற்றாயா சொல் ?

தென்றலுக் கும்வண்டிற் கும்ஏன் அனுமதி ?
தென்றலுக் கில்லைவண் டிற்குண்டு கேட்பாஸ்
திருட்டுவண் டேகேட்பாஸ் இன்றி நுழைந்தால்
வலையில் பிடித்தடைப் பேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Nov-20, 6:42 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 76

மேலே