தாம் யாரென்று உணர
![](https://eluthu.com/images/loading.gif)
உடலினுள் உலாவும் உன்னத உணர்வே உயிராகும்
ஒருவர் உடலின் உணர்வை வேறுடல் ஏற்றதில்லையே
உடலை இயக்கும் நற் வல்லமை அதற்குண்டு போலும்
நரம் நரம்பும் எலும்போடு தோலும் குருதி கலந்தியங்க
அவ்வுணர்வே அனைத்து வகை இயக்குனராய் இயக்க
கானலான எண்ணங்களின் குவியல் பெரிய செயலாய்
நிறைய செல்வத்தையும் நீக்கமில்லா புகழையும் ஈட்ட
ஓட்டமும் நடையுமாய் ஒவ்வொரு நாளும் இயக்கி
வேண்டியதைப் பெற்று விவகாரத்தை உருவாக்கி
மனம் மரண வலியில் துயருரும் நிலையில் விலகி
தாம் யாரென்று உணர வைக்கும் இறுதியே உயிராம்
உடம்போடு உருவில்லாமல் உடன்பட்டு உலகைகாணும்
உயிரை காதல் காமம் கோபம் துக்கம் தாளாமை என்ற
பல்வகை மன கிளர்ச்சியால் மட்டுமே காணயிலுகிறது
ஆன்மீகன் பொய்யன் திருடன் ஏமாற்றுபவன் என்றும்
நல்லவன் கொடையாளன் அறிவன் வீரன் என்றும்
அவ்வுணர்வே அகிலத்தின் நீள்புகழோடு உலவுவது
உடல் நீங்கிய பின்னே உணர்வோருக்கு புரிகிறது.
----- நன்னாடன்