உனக்கானது

பல ஆயிரம் கதைகள் பேசி மகிழ்ச்சியாய் கடந்த பல இரவுகள் இன்று கடக்க மறுக்கிறது.
இரவு வணக்கம் முடிந்த பிறகும் தொடரும் நம் உரையாடல் காலை வணக்கம் வரை தொடரும் விசித்திரம் இன்று இல்லை என்று ஏற்க மனம் மறுக்கிறது
இனி எல்லாம் நீதான் என்ற வார்த்தைகளுக்கான உயிர் இன்று என்னுடன் பேச யோசிக்கிறது
நாட்களும் கடந்து கொண்டே போகிறது
உன் மீது கொண்ட அன்பும், காதலும், அதிகரித்து கொண்டே போகிறது..
உன்னை வெறுக்கவோ மறக்கவோ ஒருபோதும் முடியாது..... காரணம் துடிக்கும் இதயம் உனக்கானது.

எழுதியவர் : கலைச்செல்வி (4-Nov-20, 6:36 pm)
சேர்த்தது : கலைச்செல்வி கி
பார்வை : 778

மேலே