என்னவளின் விழி

என்னவளே !
வில் போன்ற உன் விழி பட்டு
என் மார்பின் உள் துளைத்து
அகம் முதல் புறம் வரை....
அறியாத புதுமொழி
கற்று தந்தது உன் இரு விழி !
என்னவளே !
புழுதி காற்று அடித்து
கண் கலங்கினாலும்.....
கண்களை அசைக்காமல் மீண்டும் பார் உன் கயல்விழியின் இருவிழியை என பார்க்கும் ஆசையை மேலும் தூண்டுகிறது
என் இருவிழி !
என்னவளே !
கார்முகிலின் கருமையான மை கண்ணில் உடையவளும் நீதான் !
உன் கண்ணின் புவிஈர்ப்பு விசையால் வேறு பெண்ணை பார்க்காத வண்ணம் என்னை கட்டிப்போட்டவளும் நீதான் !
என்னவளே !
நீ, இனி என் இனியவளும் நீதான் !
"என் உள்ளத்திற்கு உரியவளும்
நீதான்" !...

எழுதியவர் : க. பூமணி (7-Nov-20, 9:22 am)
சேர்த்தது : பூமணி
Tanglish : ennavalin vayili
பார்வை : 559

மேலே