இறைவன் சொன்னது
ஆத்மார்த்தமான நண்பன் நட்பு
ஆத்மார்த்தமான காதல்
ஆத்மார்த்தமான கருத்து
ஆத்மார்த்தமான இசை விருந்து
என்று தன்னையே அறியாமல்
மனிதன்' ஆத்மாவை' அழைக்கிறான்
'ஆத்மா' அதுவே 'ஆன்மா
அதுதான் 'சுயநினைவு' உடல் முழுவதும்
பரவியுள்ளது .... காணமுடியாதது
அழிக்க முடியாதது , நனைக்க முடியாதது
ஆனால் அது சிறியதாய்... மிக மிக சிறியதாய்
இதயத்தினுள்ளே இருக்கின்றது
அங்கிருந்து அதன் செயலைப் பார்வையிடும் இறைவன்
'அவனும்' அங்கே உள்ளான்
எல்லாம் சூட்சும ரூபம் கொண்டவை
ஆத்மா உள்ளது நம்முள் என்பதை
நம்மை அறியாமலே உணரும் நாம்
சிலர் இதை உணர்கிறார் ...... முனிவர் இவர்
இவர்களைக் கேட்டால் சொல்லுவார்
அழியும் உடல் நீயல்ல... ஆத்மாதான் 'நீ'
'ஆத்மா' இறைவனைப் போன்றது
ஆயின் இறைவன் ஆகாது
இறைவன் எல்லாவற்றிலும் இருந்து இயங்கும் ஆத்மா... பரமாத்மா
'பரப்பிரம்மம்' அதனால் அவன்
சூரியன் பரமாத்மா என்றால்
அதிலிருந்து சிதறும் ஒளிக்கற்றைப்போல்
'ஜீவாத்மா' தனித்து ஒவ்வோர் உடலிலும் இருப்பது
உடல் அழிய .... ஆத்மா வேறு உடலைத்தேடி போகும்
அவ்வுடல் மனிதனோ, மிருகமா, தாவரமோ
அவரவர் கர்மபலப்பலனுக்கு ஏற்ப
இது அத்தனையும் கண்ணபெருமான்
' கீதோபநிஷத்' கூறும் வேத வாக்குகள்
' பகவத் கீதை' இறைவன் நமக்களித்த
'வாழ்க்கை கோட்பாடு' ..... இதை
கற்றறிவோம் இந்தியனாய், இல்லை
எந்நாட்டினாராயும் இறை வழியில்
இனிதாய் வாழ்ந்திடுவோம்