அட்டையாய்
![](https://eluthu.com/images/loading.gif)
மாநிலத்தின் செழிப்பான ஆதி மாண்பு குறைந்தாலும்
மக்களுக்கான அரசு வேலை வாய்ப்பு சிதைந்தாலும்
கிராமப்புற குழந்தைகளின் உயர்கல்லி மறைந்தாலும்
அருமை மொழியின் மீது அவலங்களை இறைத்தாலும்
ஆபத்தானவர்களால் மாநிலம் அமைதி இழந்தாலும்
குற்றச் செயல்களால் கொடூரங்கள் பல நிகழ்ந்தாலும்
அமைச்சர்களின் பாவையாய் அரசூழியர்கள் இருந்தாலும்
பணம் படைத்தோரின் பகடையாய் அரசு இயங்கிணும்
அணுவளவேனும் இதற்காக கவலைக் கொள்ளாமல்
அட்டையாய் பதவியில் ஒட்டி ஆனந்தம் கொள்ள
அயராமல் உழைக்கும் அடர் அறிவோரே உயர்ந்தவராம்.
------ நன்னாடன்.