ரகசியம்
நாளை என்ன நடக்கும்
என்பதை நினைத்து
கொண்டு இருப்பவன்
இன்று கிடைத்துள்ள
இன்பத்தை தொலைத்து
விடுகிறான்...!!
நாளை என்ன நாளை
இன்று நடப்பதையே
நானிலத்தில் யாரும்
கணிக்க இயலாது..!!
கிடைத்தை கொண்டு
கவலையின்றி
வாழ்கின்றவனே
உலகத்தில் உத்தமன்...!!
வாழ்க்கையின்
ரகசியம் என்றும்
ரகசியமாகத்தான்
இருக்க வேண்டும்..!!
--கோவை சுபா