வககன்னியப்பன் குறட்பாக்கள்
பாட்டரசர் தந்துவரும் பாராட்டை என்னென்பேன்
வேட்புமிகக் கொண்டேன் வியந்து! 31
வாழ்வு வளம்பெற வாய்மை நெறிநின்றால்
தாழ்வும் உனக்கில்லை தான். 32
இன்னல் இழைப்பாரை இன்முகமாய்ப் பார்த்தாலும்
துன்பம் இழைப்பார் தொடர்ந்து! 33
வல்லவனாய் வாழ்வில் வளம்பெற வேண்டியே
நல்லவரை எந்நாளும் நாடு! 34
பேராசை கொண்டெவரும் பின்னமிட்டுப் பூமியை
ஓராது விற்றல் உயவு! 35
உயவு: வருத்தம் Distress, trouble, suffering
கன்னல் மொழிபேசுங் காதற் கிளியேநீ
என்னெண்ணம் ஈடேற்(று) இனிது! 36
காதற் கிசைந்தவளே! கற்கண்டே! நெஞ்சே,நும்
பேதையிடம் வேண்டாம் பிணக்கு! 37
தனைஉணர்ந்து தன்கணவன் தன்னையே போற்றும்
மனைவி மனைக்கு மருந்து! 38
வாழ்வு வளம்பெற வாய்மை நெறிநின்றால்
மேன்மையுனக்(கு) என்றும் மிகும். 39
நல்லொழுக்கம் கொண்டு நடந்தால்,நீ நாளுந்தான்
எல்லா நலம்பெறுவாய் எண்ணு. 40