வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரத்தின் நினைவு பா

அடிமைத்தனத்துக்கு எதிராய் ஆர்ப்பரித்த ஆளுமையே
அறத்திற்கு கட்டுப்பட்டு ஆழி கலம் கண்டவனே
வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் என்ற தீரனே
உலகநாதரின் வழக்கு தொழிலை வளமாய் பயின்றாய்
வலிமையான நெஞ்சு படைத்த நல் வழக்கறிஞனாய்
செறுக்காய் கொழும்புக்கு நாவாய் விட்டு சிலாகித்தாய்
செக்கிழுத்து சிறையில் நீண்டதாய் துயருற்றாய்
வழக்கறிஞர் பட்டத்தை வஞ்சகமாய் பறிக்கப்பட்டாய்
இரு தாரம் மணந்து இரு நான்கு ஆண் பெண் ஈன்றாய்
வாங்கிய கடனுக்காக வாயசாகும் வரை வறுமையிலும்
விடுதலைக்காக வீரவேசத்தோடு வாழ்ந்த வீரனே
ஒட்டப்பிடாரத்தில் பிறந்தாலும் உலகம் போற்றும் கதிரே
ஓங்கியே உம் புகழை சிரம் தாழ்ந்து வணங்குகிறோம் இன்று .
- - - - நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (18-Nov-20, 11:01 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 65

மேலே