கவலை வேண்டாம்

கடல் மணலில் பதிந்த
உனது காலடி
கடல் அலை வந்தால்
கலைந்து விடும்..!!

அதுபோல்
உன் மனதில்
பதிந்த கவலைகளும்
கடல் மணலில் பதிந்த
காலடி கலைந்தது போல்
இன்பம் என்னும் அலை
வீசும்போது
உன் துன்பங்களும்
கலைந்து விடும்
கவலை வேண்டாம் மனிதா..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (23-Nov-20, 7:44 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kavalai ventaam
பார்வை : 466

மேலே